சினிமா செய்திகள்

சங்கீதா சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான் – உறுதிப்படுத்திய விஜய்?

திரையுலகப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று இராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒரு புகைப்படம், தமிழ்நாட்டில் பற்றியெரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்திருக்கிறது.

அண்மையில், நடிகர் விஜய்யின் மனைவி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு எனக்குத் தெரியவந்தது.இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்குச் சமம்.நான் இதைக் கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவைத் தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.திருமணத்தை மீறிய அந்த உறவைத் தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.எனக்கு நிறைய கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.

விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை ‘அந்த’ நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எனக்கும் எனது, பிள்ளைகளுக்கும் அவமானத்தைத் தருகிறது. ஆனால்,அந்தப் பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார். பொதுவெளியில் நன்மதிப்பைக் கெடுக்கக் கூடாது என்பதால் நடிகையின் பெயரைக் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2 ஆவது எதிர் மனுதாரராகச் சேர்ப்பேன்.விஜய்யின் நடத்தை காரணமாக சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சையால் மனரீதியான சித்திரவதை அனுபவித்தேன்.நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த விவரம் வெளியானதில் இருந்து விஜய்யுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகை த்ரிஷாதான் என்றும் கீர்த்திசுரேஷ் என்றும் பல தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், விஜய்தேவரகொண்டா ராஷ்மிகா திருமணத்தில் விஜய்யும் த்ரிஷாவும் இருப்பது போன்ற அந்தப் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்தப் புகைப்படம் நடிகர் விஜய்க்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்றும்,அவர் மனைவி சங்கீதா சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான் என விஜய்யே ஒப்புக்கொண்டதுபோல் உள்ளதெனவும் பல்வேறு கருத்துகள் சமூகவலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

Related Posts