February 10, 2026
சினிமா செய்திகள்

3 நாளில் 7 கோடி – வித் லவ் பட வியப்பு

கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம்
டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் இயக்கியிருந்தார்.

அந்தப்படம் மூலம் ஒட்டுமொத்த திரைத்துறையினரின் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த்துக்கு அடுத்தபடம் இயக்கும் வாய்ப்புகள் நிறைய தேடிவந்தன.

அவற்றோடு அவரே எதிர்பாரா வண்ணம்,கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கதவைத் தட்டியது.முதலில் தயங்கி பின்பு அதை ஏற்றார்.

2025 ஏப்ரல் 29 ஆம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது.

அடுத்த பத்தாவது மாதத்தில் அதாவது 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி அவர் கதாநாயகனாக நடித்த வித் லவ் படம் வெளியானது.

வித் லவ் படத்தில்,அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.கே.சுரேஷ் குமார் படத்தொகுப்புப் பணிகளைச் செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

சியான் ஃபிலிம்ஸ் (Zion Films) சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயிண்ட்மெண்ட் (MRP Entertainment) இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் தயாரிப்பில் உருவான இப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

வெளியாகும் முன்பு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது அந்தப்படம்.

வெளியான பின்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுப் பெற்ற இப்படம் வசூலிலும் குறை வைக்கவில்லை.

முதல்நாள் வெள்ளிக்கிழமை சுமார் ஒன்றரை கோடி வசூல் செய்த இப்படம், அடுத்தநாள் சனிக்கிழமையன்று சுமார் இரண்டரை கோடி வசூலித்திருக்கிறது.மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுமார் மூன்று கோடி வசூல் செய்திருக்கிறது.

ஆக மொத்தம் முதல் மூன்று நாட்களிலேயே சுமார் ஏழு கோடி வசூலித்து படக்குழுவினரை உற்சாகத்தில் துள்ள வைத்திருக்கிறது.

முதல்படத்தில் இயக்குநராக வெற்றி அடுத்த படத்தில் கதாநாயகனாக வெற்றி என்பதால் அபிசந்த் ஜீவிந்தும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

இவ்வாண்டு தொடங்கியதும் முதல் மாத் ஒரு படம் பெரிய வெற்றி இரண்டாவது மாதத்தில் இந்தப்படம் பெரிய வெற்றி என்பதால் திரையரங்கினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைத்துறையும் மகிழ்ந்திருக்கிறது.

Related Posts