இயக்குநர் சிவாவை திட்டித்தீர்க்கும் அஜித் ரசிகர்கள்
வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்தும்,இயக்குநர் சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி தொடங்க இருந்த நிலையில்,திரையுலகின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது.
வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இந்தப் படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
த்யாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை ஆர்.கே.சுரேஷ் மறுத்தார்.
இப்போது அவரே, இயக்குநர் சிவாவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதனால், ரசிகர்கள் அஜித் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார் என்று பேசி வருகிறார்கள். இதில் ஒரு ரசிகர் வில்லனாக நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்று கூறியிருக்கிறார். அதனால் படத்தில் ஏதாவதொரு வேடத்தில் அவர் நடிப்பது தெளிவாகிறது.
இதுமட்டுமல்ல, அப்புகைப்படத்துக்கான பின்னூட்டங்களில் அஜித் ரசிகர்கள், இயக்குநர் சிவாவை மிக மோசமாகத் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
@venkatesh8592 Replying to @studio9_suresh
சுரேஷ் அண்ணா சிவா கிட்ட சொல்லுங்க படம் நல்லா வரல எங்ககிட்ட நல்லா வாங்குவான்
@Wigvisay Replying to @studio9_suresh
Bro நாங்க சிவா மேல செம்ம காண்டுல இருக்கோம் படம் மட்டும் நல்லா வரல அவ்ளோதான் சொல்லிட்டேன்
@ThugLyfBoy Replying to @studio9_suresh @kettavandinesh7
அந்த நாய்கிட்ட படம் தீபாவளி ரிலீஸ்ன்னு போஸ்டர்ல மட்டும் போட்டா போதாது…
ஷூட்டிங் போய் அப்டேட்டும் விடணும்டான்னு சொல்லுங்க ப்ரோ….
பைத்தியக்காரன் அப்டேட்டே சொல்ல மாட்ரான்..இந்த லட்சணத்துல ஸ்ட்ரைக் வேற..
இவ்வாறு பல்வேறு கருத்துகள் பின்னூட்டத்தில் பகிரப்பட்டுவருகின்றன.









