நடிகர் சங்கம் போராட்டம் – முதலில் வந்த விஜய்
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.
இந்நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை நான்கு மணி நேர அறவழி கண்டனப் போராட்டம் நடத்துகிறது. போராட்டத்தின் முடிவில், தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
நடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்துக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரையுலக வேலைநிறுத்தம் மற்றும் நாட்டில் நடக்கும் எதிலும் கலந்துகொள்ளாத நடிகர் விஜய் போராட்டம் துவங்கும் முன்னரே முதல் ஆளாக வந்து சேர்ந்தார்.











