சினிமா செய்திகள்

திரிஷாவுக்கு ஒரு நியாயம் நிவேதாபெத்துராஜுக்கு ஒரு நியாயமா?

சில வாரங்களுக்கு முன் அதிமுக கட்சியின் உட்கட்சி சண்டை காரணமாக நடிகை த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி ஓர் அரசியல்வாதி பேசியிருந்தார்.அதற்கு ஏராளமான எதிர்ப்புகளும் கடும் கண்டனங்களும் வந்தன.

அதேபோல அண்மையில் ஓர் யூடியூபர் நடிகை நிவேதாபெத்துராஜ் குறித்து சில தகவல்களைச் சொல்லியிருந்தார்.

அவை வெறும் வதந்தி அவற்றில் எந்த உண்மையுமில்லை.அந்த வதந்திகளால் நானும் என் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்று வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டார் நிவேதாபெத்துராஜ்.

இவ்விரண்டு நிகழ்வுகளிலும் பேசிய ஆட்கள் மாறினார்களே தவிர கருத்து ஒன்றேதாம். ஆனால், த்ரிஷா பற்றிய சர்ச்சை வந்தபோது பொதுவெளிகளில் திரிஷாவுக்கு ஆதரவாகவும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு எதிராகவும் பலர் பேசினர்.

இப்போது நிவேதாபெத்துராஜும் அதேபோலப் பாதிக்கப்பட்டிருக்கிறார்.இப்போது இதுகுறித்து யாரும் கவனிக்கவேயில்லை.

இதுகுறித்து, சமூகவலைதளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு…

திரி்ஷாவை கூவத்தூர் சம்பவங்களோடு ஒருவர் சொன்னவுடன் பத்திரிக்கையாளர்களும் பெண்ணியவாதிகளும், திரைத்துறையினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்களே.. இந்த உரையாடல் திரிஷா விவகாரத்திற்கு எவ்வகையில் குறைந்தது??

திரிஷா ஒரு பெண் என்றால் நிவேதிதா பெத்துராஜ்ஜும் ஒரு பெண் தானே??

திரிஷா ஒரு நடிகை என்றால் நிவேதிதா பெத்துராஜும் ஒரு நடிகை தானே??

ஒருவேளை திரிஷா ஐயர் என்பதால் தான் அவ்வளவு கொந்தளிப்பா, இல்லை அந்தப் பேட்டியில் சன், கலைஞர் டிவி மைக் இருந்ததாலா?? இல்லை அதிமுகவைக் காப்பாற்றவா??

நிவேதிதா விசயத்தில் அமைதியாய் இருப்பது அதில் திமுக சம்மந்தப்பட்டதாலா??

அப்படி என்றால் இந்த பத்திரிகையாளர்களுக்கு திரிஷாவோ, நிவேதிதாவோ, கவலையில்லை, அதில் விசயம் திமுகவிற்கு எதிரானவர்களுக்கு எதிராகவோ, திமுகவை சம்மந்தப்படுத்தி திமுக பெயரைக் கெடுக்க வாய்ப்பு இருந்தால் பொங்கி எழுவார்கள்

அதே ஒரு பெண்ணை திமுகவுடன் சம்மந்தப்படுத்திப் பேசினால் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருப்பார்கள்

கேடுகெட்ட பெண்ணியவாதிகள்.. விலை போன ஊடகவாதிகள்.

நிவேதா பெத்துராஜ் கண்டிப்பாக வழக்கு தொடுக்க வேண்டும். காவல்துறையில் புகார் அளிக்க் வேண்டும்!

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவைத் தொடர்ந்து, த்ரிஷாவுக்கு ஒரு நியாயம் நிவேதாபெத்துராஜுக்கு ஒரு நியாயமா? என்கிற குரல்கள் எழத்தொடங்கியிருக்கின்றன.

அவை வலுப்பெறுமா? வலுவிழக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

Related Posts