துபாயில் குடியேறினார் யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அறிமுகமான காலத்திலிருந்தே வெற்றிகரமான இசையமைப்பாளராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் இப்போது,விஜய் 68, கவின் நடிக்கும் ஸ்டார், சதீஷ் நடிக்கும் காஞ்சுரிங் கண்ணப்பன்,அமீரின் மாயவலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இசையமைப்பது தவிர பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடிக்கொண்டுமிருக்கிறார்.
தொடர்ந்து வேலைகளில் தீவிரமாக இருக்கும் இந்நேரத்தில் அவர் செய்துள்ள செயல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
அப்படி என்ன செய்தார்?
அவர் குடும்பத்துடன் சென்னையிலிருந்து வெளியேறி துபாயில் குடியேறிவிட்டாராம். அங்கேயே ஓர் அதிநவீன ஒலிப்பதிவுக்கூடத்தையும் அமைத்திருக்கிறாராம்.
பாடல்பதிவு, பின்னணி இசைச் சேர்ப்பு ஆகிய அனைத்தையும் அங்கிருந்தே அவர் செய்கிறார்.
புதிதாக ஒரு படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்வதற்காக அவரைச் சந்திக்கக் கேட்பவர்களை துபாய் வரச் சொல்கிறாராம்.அப்படிச் செல்ல இயலாதவர்கள் காணொலிக்காட்சி மூலமாகக் கதை சொல்லலாம்.
பாடலுக்கான மெட்டுகளை உருவாக்கி அதை இணையம் மூலம் இங்கு அனுப்பிவிடுகிறாராம்.
பாடல்பதிவுக்கு அங்கு செல்ல இயலாத பாடகர்கள் இங்கிருந்தே பாடி அனுப்பினால் அதை அங்கிருந்து மெருகேற்றிவிடுவார்.
தொழில்நுட்பங்கள் ஏராளமாக வளர்ந்துவிட்டதால், எல்லா வேலைகளும் இணையம் மூலமே நடந்துகொண்டிருக்கிறதாம்.
அவர் நேரில் வந்தாக வேண்டும் என்று தேவைப்படும் நேரத்தில் அவர் சென்னை வருகிறாராம்.
யுவன் சங்கர் ராஜா 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார்.அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015 ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இப்போது மதச்சார்பற்ற இந்த நாட்டைவிட்டு இஸ்லாம் நாட்டுக்கே குடிபோயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









