இசையமைப்பாளர் மனைவி பிரபல இயக்குநர் – கசியும் புதுசர்ச்சை
திரையுலகில் பாலியல் தொடர்பான சிக்கல்கள் எப்போதும் உண்டு.நடிக்கவோ தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரியவோ வாய்ப்புத் தேடி வரும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி.
பிரபல நடிகர்கள் நடிகைகள் தொடங்கி எல்லோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.
அவ்வப்போது ஏதவாதொரு செய்தி அரசல் புரசலாக வெளியாகி அதிர வைக்கும்.
தற்போது அப்படி ஒரு செய்தி திரையுலகில் உலாவந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் இன்னொரு புதுசெய்தியும் கசியத் தொடங்கியிருக்கிறது,
இயக்குநர், இசையமைப்பாளர் ஆகிய இருவருமே மிகப் பிரபலமானவர்கள். இருவருக்கும் சந்தை மதிப்பும் இரசிகர் வட்டமும் உண்டு.
அவ்விருவரும் திரைப்பட வேலைகளைத் தாண்டி குடும்ப நண்பர்களாகப் பழகிவந்தனர்.
இதன்விளைவு இசையமைப்பாளரின் மனைவிக்கும் இயக்குநருக்கும் மையல் ஏற்பட்டுவிட்டதாம். இருவரும் இசையமைப்பாளர் அறியாமல் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனராம்.
பலகோடி மதிப்புள்ள மகிழுந்தில் பயணிக்கும் வசதி கொண்ட இயக்குநர், இசையமைப்பாளரின் மனைவியைப் பார்க்க வரும்போது மட்டும் புல்லட்டில் தலைக்கவசம் அணிந்து வருவாராம்.இசையமைப்பாளர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் நேர்வழியில் சென்றால் சிசிடிவியில் தெரியும் என்பதால் சுவரேறிக்குதித்துச் செல்ல அவருக்குத் தனிவழி உண்டாம்.
ஏற்கெனவே,அவர் படத்தில் நடித்த நடிகைகளுக்குத் திருமணமான பின்னரும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.இப்போது இதுவும் சேர்ந்திருக்கிறது.
அவர் பிரபலமான இயக்குநர், நடிகராகவும் இருக்கிறார் என்பதால் அவருடைய இச்சைக்கு, பிரபல நடிகைகள் உட்பட ஏராளமான பெண்கள் தாமாக முன்வருவார்கள்.
அப்படி ஒரு வசதிவாய்ப்பு உள்ள இவர், நண்பரின் குடும்பத்தைக் குலைக்கும் வேலையைச் செய்யலாமா? என்பதுதான் இந்நிகழ்வை அறிந்த நெருங்கிய வட்டத்தினரின் வேதனை.
நண்பன் என்று நம்பி வீட்டுக்குள் விட்டால் இப்படித்தான் நடந்துகொள்வதா? என்றும் வருத்தப்படுகிறார்கள்.
என்று ஓயும் இந்த புல்லட் சத்தம்?











