சினிமா செய்திகள் நடிகர் நடிகை

வரலட்சுமி சரத்குமாருக்கு விஜய் கொடுத்த பிறந்தநாள் பரிசு

துப்பாக்கி,கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் உருவாகி வருகிறது.

இன்னும் பெயர் வைக்காத இந்தப் படம் தற்போது ‘தளபதி 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதான் விஜய்யுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் முதல் படம்.

வரலட்சுமியின் பிறந்தநாள் இன்று (மார்ச் 5). இந்நாளில் வெளியான இந்த அறிவிப்பு அவருக்கான பிறந்தநாள் பரிசு என்று சொல்லலாம்.

Related Posts