கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட பூங்காநகரம் – விவரங்கள்
இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் பூங்கா நகரம்.
திருவண்ணாமலையைக் கதைக்களமாகக் கொண்டு சஸ்பென்ஸ் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் கதாநாயகனாக தமன்குமார், கதாநாயகியாக ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சி.எம் இளங்கோவன் படத்தொகுப்பு, பாடல்கள் நா.ராசா, இசை ஹமரா சி.வி ,நடனம் ராபர்ட் மாஸ்டர்.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படத்தின் முதல் பார்வையை மூத்த இயக்குநர் கேஎஸ்.ரவிக்குமார் வெளியிட்டார்.
படத்தின் பெயரும் முதல்பார்வையும் திரைப்பட இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.











