சினிமா செய்திகள்

விஷால் 34, 35 படங்களின் சம்பளம் – ஆச்சர்ய தகவல்

விஷால் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால்.

இப்போது,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் மீண்டும் ஹரி – விஷால் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

விஷாலின் 34 ஆவது படமான இது வித்தியாசமான காவல்துறைக் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்ற உள்ளனர்.

ஏப்ரல் 23 ஆம் தேதி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, மார்க் ஆண்டனி படம் முடிந்ததும் ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஐ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் தொடங்கும் என்கிற நிலை இருந்தது.

அதில் மாற்றம் ஏற்பட்டு ஹரி இயக்கும் பட அறிவிப்பு முதலில் வரக்காரணம் சம்பளச் சிக்கல் என்று சொல்லப்பட்டது.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க விஷால் இருபதுகோடி சம்பளம் கேட்டாராம். இது அதிகம், அவ்வளவு தரவியலாது குறைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டார்களாம்.

அதை ஏற்காமல் அடுத்த படத்துக்குப் போனார் விஷால்.

இப்போது இதையும் ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அதே சம்பளமா? என்றால் இல்லை. அதிலிருந்து ஒரு கோடி குறைத்து 19 கோடி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

சுமார் மூன்று மாதங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்து இந்த ஒப்பந்தத்துக்கு வந்திருக்கிறார்கள்.

இது இருக்கட்டும், ஹரி இயக்கும் படத்துக்கு சம்பளம் எவ்வளவு? என்றால், 14 கோடி என்கிறார்கள்.

ஏன் அப்படி?

அது ஹரி படம் அதனால் அப்படி, இது பாண்டிரஜ் படம் இதனால் இப்படி என்கிறார்களாம்.

நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு.

Related Posts