சினிமா செய்திகள்

மாதவனின் அத்துமீறல் – தவிக்கும் இயக்குநர்

இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றது.அதனால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன.

அவருடைய தேர்வு நடிகர் மாதவன்.அடுத்த படம் மாதவனுடன் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையிலேயே இயக்குநர் மித்ரன் ஜவகர் வருத்தப்படும்படியான செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டாராம் மாதவன்.

முதலில் மித்ரன் ஜவகர் சொன்ன கதையை நிராகரித்திருக்கிறார்.

வேறுகதை சொல்வதற்கும் இடம் கொடுக்காமல் அவரே எழுத்தாளர் ஜெயமோகனைத் தொடர்புகொண்டு பேசி அவருடைய கதையைப் படமாக்கலாம் என்று முடிவாகச் சொல்லிவிட்டாராம்.

தொழில்நுட்பக் கலைஞர்கள மற்ற நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்வதிலும் மாதவனின் தலையீடு அதிகரித்திருக்கிறதாம்.

பெரிய நிறுவனம், நல்ல சம்பளம் ஆகிய காரணங்களால் மாதவனை வைத்துப் படம் இயக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் மித்ரன்ஜவகர்.

ஆனால் தொடக்கமே இப்படி இருப்பதால் செய்வதறியாமல் தவித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

ராக்கெட்ரி படத்துக்குப் பிறகு மாதவன் ரொம்பவே மாறிவிட்டார் போலும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

Related Posts