விடுதலை படத்துக்கு 45 கோடி – தயாரிப்பாளர் நிம்மதி
விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கும் இந்தப்படத்துக்கு இசை இளையராஜா.
ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் இரண்டுபாகங்களாக வெளிவரவிருக்கின்றன.
இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஜீ௫ நிறுவனம் பெற்றிருக்கிறதாம்.
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமை ஆகிய இரண்டையுமே அந்நிறுவனம் கேட்டிருக்கிறது.
அதேநேரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் கேட்டதால் அவர்களுக்கு அதைக் கொடுத்துவிட்டு இணையதள ஒளிபரப்பு உரிமையை மட்டும் ஜீ௫ நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறாரகள்.
இதன்விலை சுமார் நாற்பத்தைந்து கோடி என்று சொல்லப்படுகிறது.இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து இந்தவிலை என்று சொல்லப்படுகிறது.
இதற்காகப் படநிறுவனம் ஐம்பதுகோடி கேட்டதாகவும் இணையநிறுவனம் நாற்பதில் தொடங்கி நாற்பத்தைந்தில் முடித்ததாகவும் சொல்கிறாரகள்.
படத்தின் பெரும்பகுதி செலவுத் தொகை இதிலேயே கிடைத்துவிட்டதால் வெளிவரும்போதே இலாபத்தில் இருக்கும் என்றும் சுமார் மூன்றாண்டுகள் பலவித சிரமங்களுக்கிடையே காத்திருந்த தயாரிப்பாளர் தற்போது நிம்மதி அடைந்திருக்கிறார் என்றும் சொல்கிறாரகள்.











