ஐயா சாமிக்கு எதிராக வந்துள்ள ஐயோ சாமி பாடல்
விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்.
அவர் எழுத்தில் தற்போது வெளிவந்துள்ள பாடல் ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்கிற தனிப்பாடல்.கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக இந்தப் பாடல் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக. பாடலைப்பாடியுள்ளார் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க.
பொத்துவில் அஸ்மின், ஏற்கனவே விஸ்வாசம்,அண்ணாத்த ஆகிய படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின.ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.
மொழி தெரியாமலே உலக இசை இரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை இரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனால் கவிஞர் பொத்துவில் அஸ்வின் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
பாடல் கேட்க…..











