செய்திக் குறிப்புகள்

அதர்வா படத்துக்குக் கிடைத்த விருது – ஆர்.கண்ணன் மகிழ்ச்சி

ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான திரைப்படங்களுக்கு விருது கொடுத்துச் சிறப்புச் செய்யும் நிகழ்வு நடைபெறும். கொரோனா காரணமாக இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த அம்மாநாடு அண்மையில் மும்பையில் நடைபெற்றது.

அம்மாநாட்டில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி தமிழ்த் திரைப்படமான “தள்ளிப் போகாதே” படத்துக்கு விருது கிடைத்துள்ளது. 

2021 டிசம்பர் மாதம் வெளியான இப்படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியிருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டது. அதற்காகவே (IIFTC) இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை அப்படம் வென்றுள்ளது.

இந்த விழா அண்மையில் மும்பையில் நடந்தபோது, இயக்குநர் தயாரிப்பாளர் அனுராக் பாசு, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ரோனி லஹிரி, தயாரிப்பாளர் வர்தா கான் நந்தியாத்வாலா ஆகியோர் முன்னிலையில் தள்ளிப்போகாதே படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஓம்சரண் விருதைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் பாடகர், இசை தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் யோஹானி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விருது இப்படத்தைத் தயாரித்த இயக்குநர் ஆர்.கண்ணனுக்குக் கிடைத்த ஒரு சர்வதேச அங்கீகாரம் என்பதால் அவர் உட்பட ஒட்டுமொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Posts