அஜீத் 61 படம் பற்றிய செய்தியும் அதனால் எழுந்துள்ள பதட்டமும்
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2023 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துக்கொண்டிருக்கும் படமும் அதே 2023 பொங்கலன்று திரைக்கு வரவிருக்கிறது என்றொரு செய்தி உலவிக்கொண்டிருகிறது.
அதற்குக் காரணம், அண்மையில் அந்தப்படத்தின் தமிழக திரையரங்கு வெளீயீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது என்றும் அவர்கள்தாம் பொங்கலன்று இந்தப்படத்தை வெளியிடலாம் என முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத்தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. எனினும் இத்தகவல்களால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் நேற்றிலிருந்து பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஏனெனில்,அஜீத் படத்தைப் பொறுத்தவரை ரெட்ஜெயண்ட் வெளியிடுகிறது என்றால் சிக்கல் எதுவும் இல்லை. அவர்கள் நேரடியாக திரையரங்குகளில் படத்தை வெளியிடுவார்கள். ஓடினால் இலாபம் ஓடாவிட்டால் நட்டமில்லை.
விஜய் படம் அப்படிக்கிடையாது. அதைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியாகவேண்டும். அவ்வளவு தொகை கொடுத்து வாங்கும்போது அப்படம் தனியாக வந்தால், படம் நன்றாக இல்லை என்று சொன்னால்கூட வசூலில் குறைவிருக்காது, இலாபம் கிடைக்கவில்லையென்றாலும் ஓரளவு நட்டத்துடன் தப்பிக்கலாம்.
அதேசமயம் கூடவே அஜீத் படம் வெளியாகிறது அதுவும் ரெட்ஜெயண்ட் என்கிற பெரிய நிறுவனம் வெளியிடுகிறது என்றால் அது கண்டிப்பாகக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயப்படுகிறார்கள்.
பல கோடி கொடுத்து விஜய்,அஜீத் படங்களை வாங்கிவிட்டு அது ஓடவில்லையெனில் வாழ்க்கையே போய்விடும் என்கிற பயம்தான் அது.
இது தொடர்பாக முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் கூறியதாவது,விஜய் படம் ஏற்கெனவே பொங்கல் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.எனவே அஜீத் படத்தையும் அதேநாளில் வெளியிடுகிறார்களா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் நினைத்திருந்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்வது இருதரப்புக்கும் நல்லது.
திரைத்துறை வியாபாரம் முன்பு போல் இல்லை.இரண்டு படங்களும் நன்றாக இருந்துவிட்டால் நல்லது, இல்லையெனில் பாதிப்பு கடுமையாக இருக்கும். முன்புபோல் தமிழ்நாட்டில் மட்டும் பாதிப்பு என்று சொல்லமுடியாது. அஜீத் படம் தமிழ்நாட்டில் மட்டுமதான் டிஸ்டிரிபியூசன், வெளிதமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குஎம்.ஜி அடிப்படையிலதான விற்பார்கள். அதனா்ல் உலகம் முழுக்க அந்த பாதிப்பு இருக்கும்.
எனவே, அஜீத் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதென அவர்கள் முடிவு எடுத்திருந்தால் அதை மாற்றிக் கொள்வது நல்லது என்கிறார்.
அஜீத் 61 படக்குழு இதுகுறித்து தெளிவுபடுத்தினால்தான் பதட்டம் நீங்கும். செய்வார்களா?










