பெரிய படத்துடன் மோதல் – தனுஷின் நானேவருவேன் அதிரடி முடிவு
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இப்படத்தில் நாயகன் வில்லன் ஆகிய இரண்டு பாத்திரங்களையும் தனுஷ் ஏற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு வடிவமைப்பு ஆகியனவற்றை சனவரி 13 இரவு 7:10 மணிக்கு ‘நானே வருவேன்’ என்ற தலைப்புடன் அடங்கிய முதல்பார்வையை வெளியிட்டது படக்குழு.
அந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16,2021 தொடங்கியது.
இப்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டார்களாம்.
செப்டம்பர் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின்செல்வன் திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேதேதியில் இப்படம் வெளியாகும் என்பதோடு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிடும் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனமே இந்தப்படத்தையும் வெளியிடவிருக்கிறதாம்.
பொன்னியின் செல்வன் வரலாற்றுக்கதைப் படம் நானேவருவேன் தற்காலச் சமுதாயப்படம் எனவே வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட படங்கள் என்பதால் ஒரேநாளில் வெளியிட ரெட்ஜெயண்ட் முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.










