சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது வணங்கான் – சூர்யாவின் திட்டம் என்ன?

சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால்,இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்புக்குத் தயாராகததால் வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. இப்போது தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

இந்நிலையில் இப்போது வணங்கான் படப்பிடிப்பை முடிப்பதற்கு முன்பாகவே சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

இப்போது அமெரிக்காவில் இருக்கும் சூர்யா சென்னை திரும்பியதும் சிறுத்தைசிவாவின் படம் தொடங்கும் என்றும் அதன் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வணங்கான் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யா சென்னை வந்தவுடன் இது உறுதி செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள்.

பார்ப்போம்.

Related Posts