சினிமா செய்திகள்

சிம்பு அனிருத் இணைந்து செய்த செயல் – தெறிக்கும் இணையம்

சில நாட்களுக்கு முன் தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கங்களில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட கறுப்பு தமிழன்னையின் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், தமிழணங்கு, “இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

அதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில்,ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமான், இந்தி இணைப்பு மொழி என்று அமித்ஷா சொல்கிறாரே என்கிற கேள்விக்கு, தமிழ்தான் இணைப்பு மொழி என்று பதில் சொன்னார்.

அவர் சொன்னது வேகமாகப் பரவி அவருக்குப் பெரும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு, நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில், தமிழால் இணைவோம் #Tamilconnects என்று பதிவிட்டிருக்கிறார்கள்.

இதனால் அவர்களுக்குச் சிறிய அளவில் எதிர்ப்பும் பெரும் ஆதரவும் இருக்கிறது.

Related Posts