சினிமா செய்திகள்

நடன இயக்குநர் சிவசங்கர் மரணம் – தென்னிந்தியத் திரையுலகம் இரங்கல்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் நடன இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் சிவசங்கர்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,இன்று இரவு எட்டு மணியளவில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

800 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகாதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபடியும் படத்தில் இடம்பெற்ற ஆசை அதிகம் வெச்சு,திருடாதிருடி படத்தில் இடம்பெற்ற மன்மதராசா ,மகதீராவின் தீர..தீர மகதீரா… ஆகிய பாடல்கள் இவருடைய நடன இயக்கத்துக்குப் பெரும்புகழ் சேர்த்த பாடல்கள்.

இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடன இயக்குநர் சிவசங்கர் மறைவிற்கு தென்னிந்தியத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts