உலகக் கோப்பையை வென்றதெப்படி ? கபில்தேவ் பயோபிக்கான 83 பட டிரெய்லர்
1983ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றதை மையமாக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தி திரைப்படம் ‘83’. இந்தப் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு 1983. கிரிக்கெட் உலகில் பெரிதும் கவனிக்கப்படாத நாடாக இருந்து வந்த இந்தியாவை, உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஆண்டு 83. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான அணி முதல்முறையாக உலகக் கோப்பையை எப்படிக் கைப்பற்றியது, அதன்பின் இருக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கபில்தேவ்வின் பயோபிக்காக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் கபில் தேவ் கேரக்டரில் ரன்வீன் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்த் தேவா ரோலில் நடிகர் ஜீவா, நடிகையாக தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கபீர்கான் இயக்கியிருக்கிறார்.
1983ஆம் ஆண்டு பெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான அணி 2011-ல் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. தோனியின் பயோபிக்காக ‘ M.S. Dhoni: The Untold Story’ படம் வெளியானதைத் தொடர்ந்து, கபில்தேவ் பயோபிக் படமாக இது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படமானது இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளிலும் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.











