சினிமா செய்திகள்

விஷாலின் 33 ஆவது படம் – புதிய தகவல்

விஷால்,ஆர்யா நடிப்பில் ஆனந்த்ஷங்கர் உருவாகியிருக்கும் எனிமி படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.

இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று (அக்டோபர் 17,2021) மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றி அறிவிப்பு ஏதும் இல்லை.

ஆனால், இவற்றிற்கடுத்து ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் விஷால்.

விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தைத் தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் என்கிறார்கள்.

படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவருகிறதாம். தீபாவளி முடிந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனச் சொல்லப்படுகிறது.

Related Posts