சினிமா செய்திகள்

விவாகரத்துக்குப் பிறகு சமந்தா நடிக்கவிருக்கும் தமிழ்ப்படம் – விவரங்கள்

நடிகை சமந்தா இப்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துமுடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தன் கணவர் நாகசைதன்யாவைப் பிரிந்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்பின், அவர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பார் என்றும் சொன்னார்கள்.

ஆனால், அவர் உடனடியாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

புது இயக்குநர் சாந்தரூபன் என்பவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் சமந்தா. கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதாலும் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள சாந்தரூபன் சொன்ன விதத்தாலும் சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

இப்படத்தை டிரீம்வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்த போதும் அவற்றை மறுத்த சமந்தா, ஒரு புதிய இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது அவர் சார்ந்தோருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts