ஆர்யா தீவிர முயற்சி – திரையரங்குகளில் வெளியாகிறது சார்பட்டா பரம்பரை
ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது சார்பட்டாபரம்பரை படம். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா,பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு.
அதேசமயம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கவேண்டிய படம் என்றும் படக்குழுவினர் பணத்துக்காக தப்பு செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் உலாவந்தன.
இந்நிலையில், இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடவும் படக்குழு முயற்சி எடுக்கிறதாம்.
இப்படத்தைத் தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் பொறுப்பை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறதாம்.
இதுதொடர்பாக படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி திரையரங்குகளில் வெளீயிடும் அனுமதியைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்க்கிறாராம் ஆர்யா.
எல்லாம் சரியாக அமைந்தால் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
நடந்தால் நல்லதுதான்.











