திருமணத்தை அறிவிக்கிறார் நயன்தாரா
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் நெற்றிக்கண்.மிலிந்த்ராவ் இயக்கத்தில் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இது ப்ளைன்ட் என்கிற கொரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தைப் பெரிய விலைக்கு வாங்கியுள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம்.அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என்று நயன்தாராவுக்கு நிபந்த்னை விதிக்கப்பட்டதாம்.
அவரும் அதை ஏற்றுக்கொண்டு பேட்டி கொடுத்திருக்கிறாராம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்கிற அடைமொழியுடன் ஆகஸ்ட் 15 ஆம் அப்பேட்டி ஒளிபரப்பாகவிருக்கிறதாம்.
அப்பேட்டியில், தனது திருமணத்தை நயன்தாரா அறிவிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.











