சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்ட இரண்டு புதிய படங்கள் ?

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகளில் இருக்கிறார்கள்.

இவற்றிற்கடுத்து, சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.புது இயக்குநர் அசோக் இயக்கும் அந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.

இவைதவிர, இன்னும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படமும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படமும் ஒப்புக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அப்படங்களின் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts