சினிமா செய்திகள்

தனுஷ் அனிருத் இணையும் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் இப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தனுஷின் 43 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது.

தனுஷின் 44 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்க நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதேபோல், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

இதையும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Related Posts