சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் இரண்டு படங்கள் – விவரம்

இயக்குநர் பாலா இயக்கிய முதல்படம் சேது. அது 1999 ஆம் ஆண்டு வெளீயானது. அவர் இயக்கத்தில் உருவான வர்மா 2020 இல் வெளியானது.

இருபத்தியொரு ஆண்டுகளில் அவர் இயக்கியவை ஒன்பது படங்கள் மட்டுமே. நடுவில் சில படங்களைத் தயாரித்துள்ளார்.

ஆனால், இப்போது அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார் என்றும் அவற்றிற்கான திரைக்கதைகள் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இவற்றில் முதலில் தொடங்கவிருப்பது நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்துக்கு அடுத்து அவர் இயக்கவிருக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

இரண்டு படங்களுக்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்றாலும் அவை குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்றும் முதலில் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இவற்றோடு அவர் தயாரிப்பில் உருவாகியுள்ள விசித்திரன் திரைப்படமும் தணிக்கைக்குத் தயாராகிவிட்டதாம்.

Related Posts