சினிமா செய்திகள்

நயன்தாரா நடிக்கும் புதியபடம்

நயன்தாரா இப்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.

காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம்.

இவற்றிற்கடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

ஆனால், இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம்வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் அவ்விரு படங்களும் உருவாகவிருக்கிறதாம்.

முதலில் தொடங்கவிருக்கும் படத்தை பட்டாபட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கவிருக்கிறாராம்.

இரண்டு படங்களுமே கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் என்பதால் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.

இவை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts