சிம்புவின் 47 ஆவது படப்பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது.
சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் நேற்றிரவு (பிப்ரவரி 25) அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது சிம்புவின் 47 ஆவது படம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அதன்படி, அப்படத்துக்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதோடு, இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைய்மைக்கவிருக்கிறார் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சிம்பு கவுதம்மேனன் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத மத்தியில் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.











