தனுஷ் படத்துக்காக செல்வராகவன் புதிய கூட்டணி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது.
அதன்பின் செல்வராகவன், தனுஷை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார்.
இந்தப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாம். கதை திரைக்கதையை இறுதி செய்துவிட்டார்களாம். அதனால் அடுத்தடுத்த பணிகளும் ஆரம்பமாகிவிட்டதாம்.
செல்வராகவன் தொடக்கத்தில் தன்படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளாக வைத்திருந்தார்.
அதன்பின் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்றினார்.
என்ஜிகே படத்தில் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்தார்.
இப்போது தனுஷ் படத்துக்காக இவ்விரு இசையமைப்பாளர்களையும் விட்டு விட்டு வேறொரு இசையமைப்பாளருடன் பணியாற்றுகிறாராம்.
அந்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.
இவர் ஏற்கெனவே தனுஷ் படங்களுக்கு இசையமைத்திருந்தலும் செல்வராகவனுடன் இணைவது இதுவே முதன்முறை.
எனவே மிகுந்த உற்சாகத்துடன் வேலைகளைத் தொடங்கிவிட்டாராம் ஷான் ரோல்டன்.
இப்படத்தின் பாடல்கள் நிச்சயம் பெரிய வெற்றியடையும் என்று நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் ஷான் ரோல்டன்.











