இரண்டு படங்கள் தயாரிக்கிறார் ஆர்யா
நடிகர் ஆர்யா இப்போது டெடி, அரண்மனை 3 மற்றும் பா.இரஞ்சித் இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் டெடி படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். அரண்மனை 3 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.பா.இரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பெரும்பகுதி பாக்கி இருகிறது.
இந்நிலையில், விஷால் நடிக்கும் புதிய படமொன்றில் ஆர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதுதவிர மேலும் இரண்டு படங்களில் அவர் நடிக்கவிருக்கிறாராம்.
அவ்விரு படங்களையும் தி சோ பீப்பிள் படநிறுவனம் சார்பாக அவரே தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
ஆர்யாவை வைத்து டெடி படத்தை இயக்கியிருக்கும் சக்திசெளந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு படமும், ஆர்யாவை வைத்து மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார்களாம்.
கொரொனா சிக்கல் முடிவடைந்து படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியதும் அரண்மனை 3, பா.இரஞ்சித் படங்களின் படப்பிடிப்பு மற்றும் விஷால் படத்தின் படப்பிடிப்பு ஆகியனவற்றின் தேதிகள் முடிவு செய்துவிட்டு அதற்கேற்ப சொந்தப் படத்தின் படப்பிடிப்புகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.











