November 5, 2025
செய்திக் குறிப்புகள்

கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்

நளனும் நந்தினியும், சுட்டக்கதை ஆகிய படங்களைத் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள நகைச்சுவைத் திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”.
இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த்.
“நட்புனா என்னன்னு தெரியுமா” திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக இன்னொரு படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.
பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு – ஒம் நாராயன், இசை – கிரிநந்த்
படத்தொகுப்பு – ஆலன்
மலையாள திரையுலக புகழ் ஆதில் தமிழ்த் திரையுலகிற்கு இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற “Dance 4 Dance” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக, சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கின்றார்.
மேலும் இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறும் என்று கூறுகிறார்கள்.

Related Posts