November 5, 2025
சினிமா செய்திகள்

வாலியா? வரலாறா? அஜீத் முடிவு என்ன?

அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது.

அதேபோல அஜீத் மூன்று வேடங்களில் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத், அசின் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

இப்போது இவ்விரு படங்களையும் இந்தியில் மொழிமாற்று செய்யும் உரிமையை போனிகபூர் வாங்கியிருக்கிறாராம்.

அஜீத்தின் திரைப்பயணத்தில் மிகவும் பலம் சேர்ப்பதாக இப்படங்கள் அமைந்திருந்தன. இதன்மூலமே இந்தியிலும் அஜீத் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் வாலி அல்லது வரலாறு படத்தின் இந்தி மொழிமாற்றில் அஜீத் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

வலிமை படப்பிடிப்பு தொடர்பாக அஜீத்துக்கும் தயாரிப்பாளர் போனிகபூருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதென்றும் அதைச் சரி செய்வதற்காகவே போனிகபூர் இப்படங்களின் இந்தி மொழிமாற்று உரிமையைப் பெற்றிருக்கிறார் என்றும் பேச்சு இருக்கிறது.

இவற்றில் எது சரி என்பது இன்னும் சில நாட்க்ளில் தெரிந்துவிடும்.

Related Posts