செய்திக் குறிப்புகள்

விக்ரம்பிரபுவின் துப்பாக்கிமுனைக்கு எதிர்பார்ப்பு அதிகரிப்பு

தினேஷ்செலவராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.இப்படம் உலகெங்கும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப்படம்,
பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். காவல் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

துப்பாக்கி முனை படத்துக்கு தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

படத்தில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பெயரும் கதையமைப்பும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

Related Posts