சினிமா செய்திகள்

விஜய் 67 படத்தின் மூன்றாவது வில்லன் இவர்தான்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம்.

66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது.

விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.

அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.

மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் 67 படத்துக்கும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள் எனவும் அவர்களில் ஒருவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் பேச்சு இருக்கிறது.

அடுத்து இந்தி நடிகர் சஞ்சய்தத்தும் விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவ்விருவர் தவிர மூன்றாமவராக இருப்பவர் இயக்குநர் கெளதம்மேனன் என்று சொல்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு,கெளதம்மேனன் இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அறிவிப்போடு அது நின்றுபோனது.

அதன்பின் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது, விஜய் படத்தில் கெளதம்மேனன் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Posts