November 5, 2025
சினிமா செய்திகள்

விஜய் 67 படப்பிடிப்பு இன்று தொடக்கம்

வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் 67 ஆவது படமாக அது தயாராகவிருக்கிறது.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்/இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

இதனை,நடிகர் மனோபாலா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “தளபதி 67- படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ்கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியைச் சந்தித்தேன். அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில் இருக்கிறார். முதல் நாளே தூள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பு நிறுவனமோ படக்குழுவோ அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கவில்லையெனிலும் மனோபாலாவின் பதிவை அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கொள்ளலாம்.

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து வாரிசு வெளியீடு பொங்கல் பண்டிகை ஆகியனவற்றிற்குப் பிறகு வடமாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts