செய்திக் குறிப்புகள்

பிரபல இயக்குநரின் பெயரில் பழிவாங்கும் படலம்

புதுமுக இயக்குநர் மனோ இயக்கத்தில் அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள படம் வெற்றிமாறன். இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார்.

தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதைத் தடுக்கப் பல வழிகளில் முயற்சிக்கிறான்.

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கக் கிளம்பினால்..? அதுதான் இந்தப்படத்தின் கதை.

இதைக் கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் மனோ. குறிப்பாக, பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளைக் கையாண்டுள்ளார். அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்தப் பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் அடங்குகிறதாம்.

Related Posts