செய்திக் குறிப்புகள்

வெனோம் தி லாஸ்ட் டான்ஸ் – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றாக வெனோம் உருவாக்கப்பட்டு உலகெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது,நடிகர் டாம் ஹார்டி ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இறுதிப் படத்திற்காக திரும்புகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்ளும் வேட்டையாடப்பட்டு இருவரும் பேரழிவு முடிவுக்குத் தள்ளப்படுவதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதும்தான் இந்தப்படம்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான டாம் ஹார்டியின் கடைசி ஆண்டி-ஹீரோ படம் இது. மேலும் மிகவும் பிரபலமான ஆண்டி-ஹீரோ பிரான்சைஸ் இதோடு முடிவுக்கு வருகிறது. த்ரிலிங் தருணங்கள், ஆக்‌ஷன் என டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் பல தருணங்கள் இரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச் மற்றும் ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹார்டி மற்றும் மார்செல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதி கெல்லி மார்செல் இயக்கியுள்ளார். படத்தை அவி ஆராட், மாட் டோல்மாக், எமி பாஸ்கல், கெல்லி மார்செல், டாம் ஹார்டி மற்றும் ஹட்ச் பார்க்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் முன்னோட்டமும் ஒளிபரப்படுகிறது.

‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி முன்னோட்டம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.ஆனால்,அதற்கு முன்பே இப்போது தென்னிந்தியாவில் இந்த வாரம் வெளியான மிகப்பெரிய படங்களுடன் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் முன்னோட்டம் அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்படுகிறது.

இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட இரசிகர்கள் இப்பட வெளியீட்டை ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.இதனால் திரையரங்குக் காரர்களும் இப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் திரையிடப் போட்டி போட்டு வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. 

Related Posts