சினிமா செய்திகள்

மாஸ்டர் பாடலைப் புகழ்ந்த தெலுங்கு முன்னணி நடிகர் – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடல் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியானது.

அதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலாக, ‘வாத்தி கம்மிங்’ பாடல் மார்ச் தொடக்கத்தில் வெளியானது. சென்னை வட்டார வழக்கில் அமைந்துள்ள பாடல் வரிகளுடன் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ‘வாத்தி ரெய்டு’ மார்ச் 14 ஆம் தேதி வெளியானது. விஜய் ரசிகர்களும் இசை ரசிகர்களும் இப்பாடலை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகிறார்கள்.

இதுவரை ஒன்றரைகோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்திருக்கும் அப்பாடல் குறித்து, இன்று தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு சிரிஷ், வாத்தி ரெய்டு வாத்தி ரெய்டு ஆன் ரிப்பீட் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

திரும்பத் திரும்ப அந்தப்பாடலைக் கேட்பதாக அவர் வெளிப்படையாகச் சொன்னதும் அவருடைய ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் இணைந்து மகிழ்ச்சியுடன் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts