சினிமா செய்திகள் நடிகர்

உதயநிதிக்கு இது அழகா?

சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.

செப்டம்பர் 6-ம் தேதி இந்தத் தலைப்பை அதிகாரபூர்வமாக வெளியிடும் படக்குழு, 7-ம் தேதியில் இருந்து சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறது என்றும் செய்திகள் வருகின்றன.

உதயநிநி படத்துக்கு இப்படி ஒரு பெயர் என்றதும் விமர்சனங்களும் வரத் தொடங்கியிருக்கின்றன.

அவர் நடிகர் மட்டுமல்ல தமிழ், தமிழர் என்று வந்தாலே பிரிக்க முடியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவருடைய தாத்தா. கலைஞரின் தமிழ்நடை கேட்டு வளர்ந்தவர், குறிஞ்சி மலர் போன்ற தந்தையைப் பெற்றவர்.

அவர் இதுவரையில், கெத்து, மனிதன், பொதுவாக எம் மனசு தங்கம், நிமிர் என்பது உட்பட நேர்மறையான பெயர்கள் வைத்தவர்.

அந்தப்படங்கள் வியாபார ரீதியாகப் பெரிய வெற்றி பெறவில்லை என்பதற்காக இப்படி ஒரு பெயருக்குச் சம்மதித்தாரா? எனத் தெரியவில்லை.

அப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் பெண்களும் குழந்தைகளும் அமர்ந்து பார்க்கிறார்கள். அதனாலேயே திரும்பத் திரும்ப அப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.சைக்கோ என்கிற பெயர் இருந்தால் இப்படி நடக்குமா?

இப்போது இந்தப் பெயருக்குப் பொருத்தமாக கதை இருக்கலாம் ஆனால் உதயநிதியின் பால்போன்ற சிரிப்புக்கு இப்பெயர் பொருத்தமாக இருக்காது என்றே பலரும் சொல்கிறார்கள்.

Related Posts