தமிழில் உருவாகிறது புகழ்பெற்ற மலையாளப்படம்
அண்மையில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளைக் கிளப்பிய மலையாளப் படம்,
“தி கிரேட் இந்தியன் கிச்சன்”.
இப்படம் இப்பொழுது சுடச் சுட தமிழில் உருவாகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படத்தினைத் தயாரித்து, இயக்குகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும்.
மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. தமிழ் – தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஆர்.கண்ணன், தற்போது அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” ரொமான்ஸ் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி, இறுதிகட்டப்பணிகள் நடந்து வருகிறது.
இதையடுத்து, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும்பாராட்டுக்களை குவித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தை தமிழில் உருவாக்கம் செய்கிறார்.
இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.
இயக்குநர் கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம் கே ஆர் பி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.தமிழில் வசனங்களை சவரிமுத்து மற்்றும் எஸ்.ஜீவிதா சுரேஷ்குமார் ஆகியோர் எழுதுகிறார்கள்.
லியோ ஜான் பால் படத்தொகுப்பையும்
கலை இயக்கத்தை ராஜ்குமாரும் உடை வடிவமைப்பை பிரதீபா பாண்டியனும் கவனிக்கிறார்கள்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.











