2001 ஆம் ஆண்டு வெளியானது அஜீத் நடித்த தீனா படம்.அதன் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல்படமே வெற்றி என்பதால் அவருக்கு நிறைய மதிப்பு மட்டுமின்றி எல்லாக் கதாநாயகர்களுமே அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். முருகதாஸின் இரண்டாவது பட நாயகன் விஜயகாந்த்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவின் போதும் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியையொட்டி ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம்பெறுவது
பிகில் படத்தின் கதை என்னுடையது என்று சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கே.பி.செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட நீண்ட செய்திக்குறிப்பின் ஒரு பகுதியில், வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ்
சென்னை அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய் நடித்த பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா செப்டம்பர் 19 மாலை நடந்தது. விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மிகப்பெரிய வளாகம் என்றபோதும் சிறிது நேரத்தில் மகிழுந்து நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர். இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப்,
விஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது. அதில் விஜய் ரசிகர்களுக்கென்று சுமார் மூன்றாயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். அதேசமயம் படத்தில் பணிபுரிந்த
விஜய் நடிக்கும் பிகில் படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய், அப்படியே விமான நிலையம் சென்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாராம். குடும்பத்துடன் பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தேதிகள்
இயக்குநர் ஷங்கர், 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற மகிழுந்தை இறக்குமதி செய்தார். இந்த மகிழுந்துக்கு நுழைவு வரியாக சுமார் ரூ.44 லட்சம் செலுத்திவிட்டு, வணிக வரித்துறை முதன்மை ஆணையரிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, பதிவு செய்ய முடியும் என்று கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறினார். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில்
நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாக உள்ள 65 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “நெற்றிக்கண்” படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிலிண்ட் ராவ் இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் படத்தை இரண்டு நாட்கள் முன்னதாக வெள்ளிக் கிழமையே வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். இப்போது அதில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறதாம். இன்னும் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.






















