சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைகிறார் அவருடைய திரையுலக அறிமுகப் படத்தை அறிமுக இயக்குநர் லோகன் இயக்குகிறார். இவர், மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில்
மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டதல திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் லோகன்.இவர் இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் இயக்கும் படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம், தனது முதல் படைப்பாக புரொடக்ஷன் நம்பர் 1 மூலம் திரைப்பட உலகில் தனது கால்பதித்துள்ளது.
தக்லைஃப் பட பாடல் வரிசைகளில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல்,முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடல்.அந்த தொடக்க வரியை விட, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமளவுக்கு அந்தப்பாடல் புகழ் பெற்றிருக்கிறது. இந்தப்பாடல் புகழ் பெற்ற அளவுக்கு சர்ச்சையையும் சந்தித்தது. அதற்குக் காரணம், இந்தப்பாடலை முதலில் பாடியவர்
தூத்துக்குடியில் மிகப்பெரிய தாதாவின் வளர்ப்பு மகனான சூர்யாவும் தாதாதான்.ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலிலிருந்து விலகி திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் அதனால் திருமணம் தடைபடுகிறது.சூர்யா சிறைப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரெட்ரோ. சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும்
நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா. அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன் வாழ்க்கை அப்படியன்று. வறுமையும் ஏழ்மையும் பின்னிப் பிணைந்த வாழ்வில் உரிமைப் போராட்டத்தில் உயிரை
பியானோ இசைக்கலைஞர் பிரசாந்த்,பிரியா ஆனந்த்தின் மதுக்கூடத்தில் இசைத்துக் கொண்டிருக்கிறார்.அங்கு பிரபல நடிகர் கார்த்திக் அறிமுகம் கிடைக்கிறது.அதனால்,அவர் வீட்டுக்கு பியானோ இசைக்கச் செல்கிறார்.அங்கு போனால் அவர் கண் முன்னால் ஒரு கொலை நடக்கிறது.அதன்பின் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் முடிவுகள் என்ன? என்பதைச் சொல்வதுதான் அந்தகன். சில ஆண்டுகளுக்குப் பின் திரையில் தோன்றுகிறார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இயக்கியுள்ள படம் வாழை. நவி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க,டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மாஸ்டர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. புதுமுக
இது கிபி 2024 ஆம் ஆண்டு.இப்போதிருந்து 874 ஆண்டுகள் கழித்து அதாவது கிபி 2898 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையில் காம்ப்ளக்ஸ் என்கிற உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உலகத்தை 200 வயது நிரம்பிய ஒற்றை மனிதர் ஆட்சி செய்கிறார்.அவரை அழிக்க ஒரு தெய்வக் குழந்தை பிறக்கப்போகிறது.அந்தக் குழந்தையை அழிக்க அவர் முயல்கிறான்.அந்தக் குழந்தை பிறந்தால்தான் மகாபாரதக்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் தற்போது நடந்துவருகின்றன. கங்குவா படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்கிற படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதைக் காலவரையின்றித் தள்ளி வைப்பதாக அறிவித்துவிட்டார்கள்.மார்ச் 18 ஆம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது. அடுத்த பத்தே நாட்களில்
2012 ஆம் ஆண்டு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அப்படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ்இ ரசிகர்களிடம் தனித்துவமான இசைக்கலைஞர் என்கிற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.





















