சினிமா செய்திகள்

சத்தமின்றி தொடங்கியது சூர்யாவின் புதிய படம்

விரைவில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம்.

அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. 2020 தீபாவளி வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் 40 ஆவது படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.

இவையெல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் எவ்வித அறிவிப்பும் செய்யாமல் புதிய படமொன்றில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஏற்கெனவே கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் புதியபடத்தில்தான் சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

மார்ச் 8 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு செஞ்சி அருகே நடந்து கொண்டிருக்கிறதாம்.

எலிவேட்டை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

Related Posts