September 21, 2026
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் 21 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இதற்கடுத்து புதுஇயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்படத்தை, டாக்டர் படத்தைத் தயாரித்த கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.

டாக்டர் பட வெளியீட்டின்போது தயாரிப்பு நிறுவனத்தக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தள்ளிப்போயிருக்கிறதாம்.

அதனால், அண்மையில் ஒப்புக்கொண்ட தெலுங்குப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்ததிகேயன் என்று சொல்லப்பட்டது.

அதை இசையமைப்பாளர் தமன் உறுதிப்படுதியிருக்கிறார்.

அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதற்கு, உங்கள் அன்புக்கு நன்றி. பின்றோம் தட்றோம் தூக்கறோம் என்று சொல்லி கூடவே எஸ்கே21 என்கிற குறியீட்டையும் பதிவிட்டிருக்கிறார்.

இதன்மூலம், சிங்கப்பாதைக்கு முன்பாக தெலுங்குப்படம் தொடங்கவிருப்பது உறுதியாகிவுட்டதென்கிறார்கள்.

Related Posts