செய்திக் குறிப்புகள்

சின்னமச்சான் புகழ் பாடகர் செந்தில்கணேஷ் நடிகரானார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், சின்ன மச்சான் செவத்த மச்சான் என்கிற பாடலைப் பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்தப் பாடலை எழுதியவர் செல்ல தங்கையா.

அதற்குப் பிறகு இந்தப் பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது.

யூடியூப்பில் இன்று வரை 30 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.

இப்பாடல் மூலம் உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு கரிமுகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறது.

செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குநர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு எழில் பூஜித், படத்தொகுப்பு பன்னீர் செல்வம் ,கேசவன். கலை நித்தியானந்த்,நடனம் சங்கர்.ஆர்., சண்டைப் பயிற்சி திரில்லர் முருகன்

ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக டி.சித்திரைச்செல்வி , எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது..

காதல், பாசம், சண்டை ஆகிய எல்லா அம்சங்களும் கலந்து இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். பாடகராக உலகப்புகழ் பெற்றிருக்கும் செந்தில்கணேஷ் இந்தப்படம் வெளியானால் நடிகராகவும் பெரும் புகழ் பெறுவார்.

கரிமுகன் படத்திற்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள பெரிய மலையில் ஒரு காதல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைதியான அந்த காட்டுப்பகுதியில் திடீரென்று ஸ்பீக்கர் சத்தம், நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தித் துரத்திக் கொட்ட ஆரம்பித்து விட்டது. தேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டனர். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்துவிட்டு. மறுநாள் பக்கத்தில் இருந்த வேறொரு மலையில் படிப்பிடிப்பை முடித்தோம்.

படம் இம்மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குநர்.

Related Posts