காத்துவாக்குலரெண்டுகாதல் படப்பிடிப்பு – சமந்தாவின் நிபந்தனை
விஜய்சேதுபதி,நயன்தாரா,சமந்தா ஆகியோர் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளீயிடப்பட்டது.
கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போனது.இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்தில் இன்னொரு நாயகியாக இருக்கும் சமந்தா, தனக்குக் கதையில் முக்கியத்துவம் இல்லையென்பதால் விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் அதில் உண்மையில்லையாம். இப்படத்தில் சமந்தா நடிக்கவிருப்பது உறுதி என்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், இந்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்க முதல் காரணமே சமந்தாதான் என்றும் சொல்கிறார்கள்.
அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் பிரசவம் நடக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதற்கு முன்பாக இந்தப்படத்தை முடித்துக் கொடுத்துவிடுகிறேன், உடனடியாகப் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதனால், நிறையப் படங்களைக் கைவசம் வைத்திருக்கும் விஜய்சேதுபதியிடம் இந்தத் தகவலைச் சொல்லி உடனடியாகப் படப்பிடிப்பைத் தொடங்கத் தேதிகள் வாங்கியிருக்கிறார்களாம்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.











