விக்ரமின் சாமி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த சாமி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம்பாகமாக சாமி 2 படம் உருவாகிவருகிறது.
இப்படத்தில் விகரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடந்திருக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதென்றும் இன்னும் சில நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் முதல்பார்வை மற்றும் மோஷன்போஸ்டர் ஆகியன மே 17 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் இன்று அறிவித்துள்ளார்.











