மணிரத்னத்தின் புதியபடம் ரோஜா 2
விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின்செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது.
அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது.
ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பெரும் கூட்டம், நிறைய குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவற்றை வைத்துப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பதால் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான திட்டமிடல் மீண்டும் தாமதமாகிறதாம்.
இதனால் விக்ரம், கார்த்தி, விக்ரம்பிரபு உள்ளிட்ட நடிகர்கள் வேறு படங்களில் நடிக்க முன்வந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதோடு படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவன் ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டில் நூறுகோடி வரை குறைக்கச் சொல்கிறதாம்.
இந்நிலையில், மணிரத்னம் இன்னொரு திரைப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாராம்.
1992 இல் வெளியான ரோஜா படத்தின் இரண்டாம்பாகத்தைத் தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
முதலில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.











