2.ஓ பட நிகழ்ச்சிக்கு ரஜினி மும்பை செல்லவில்லை ஏன்?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்த படம் 2.ஓ.
இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.
தமிழைப் போல இந்தியிலும் பெரிய அளவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
இதனால் மும்பையில் இப்படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
அதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அக்ஷய்குமார் ஆகிய இருவர் மட்டும் கலந்துகொண்டனர்.
இந்தி ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான ரஜினி கலந்து கொள்ளவில்லை.
சென்னையில் இப்படத்தின் விழா நடந்தபோது அக்ஷய்குமார் வந்திருந்தார். ஆனால் மும்பைக்கு ரஜினி செல்லவில்லை.
அதற்குக் காரணம், இந்தியாவின் பறவை மனிதர் அசன்அலியை பிரதிபலிக்கும் வேடத்தில் அக்ஷய் நடிக்கிறார் என்பதால் அவர்தான் படத்தின் நாயகன் என்று கருதப்படுவார்.
செய்தியாளர்கள் மத்தியில் ரஜினி வில்லனாக நடிக்கிறார் என்ற பேச்சு வந்துவிடக் கூடும் என்பதால் ரஜினி கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் தமிழில் படத்தை விளம்பரப்படுத்துவது மட்டும்தான் ரஜினிக்குப் பொறுப்பு என்பதால் இந்திப்படத்துக்காக அவர் மும்பை செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.











